உள்ளூர் செய்திகள்
.

விவசாயிகளுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-04-05 10:18 GMT   |   Update On 2022-04-05 10:18 GMT
பட்டுக்கூடு உற்பத்தியில் அதிக மகசூல்: விவசாயிகளுக்கு கலெக்டர் பாராட்டு
நாமக்கல்: 

நாமக்கல் மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் அதிக மகசூல் ஈட்டிய விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ரொக்கப் பரிசு கள் வழங்கிப் பாராட்டினார்.

மாநில அளவில் பட்டுக்கூடு உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளுக்கான பட்டியலில் 3-ம் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கமலத் துக்கு, முதல்வரால் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை அவர் கலெக்டரிடம் காண் பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத் தில் அதிக மகசூல் பெற்ற பட்டு விவசாயி களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப் பட்டன. 

அவற்றில், ராசிபுரம் பெண் விவசாயியான கமலத்துக்கு, முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், சேந்தமங் கலம் வட்டம் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபிக்கு 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை யும், சேந்த மங்கலம் வட்டம் நஞ்சுண்ட புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமிக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை யையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சி யில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முத்துப் பாண்டி, பட்டு விவசாயிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News