உள்ளூர் செய்திகள்
மாணவர்களுடன் கற்றல் முறை குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்துரையாடினார்.

பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2022-04-01 09:23 GMT   |   Update On 2022-04-01 09:23 GMT
திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் கற்றல் முறை குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்துரையாடினார்.
திருவாரூர்:

கொரோனா காலத்திற்கு பிந்தைய கற்றல் சூழலை நன்கு உணர்ந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் உளவியல் ரீதியாக மாணவர் களை அணுக திட்டமிட்டார்.

அதனடிப்படையில் மாணவர்களின் இல்லச்சூழல், அரசுப் பள்ளிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றை எளிமையான முறையில் கலந்துரையாடி அவர்களது உள்வெளிப் பாட்டினை தெளிவாக அறிந்து கொண்டார்.

மேலும் சத்தான உணவு, குடிநீர் மற்றும் கழிவறைவசதி ஆகியவற்றையும் இயல்பான முறையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டார்.

‘நம்பள்ளி நம் பெருமை, ‘நான் முதல்வன் ஆகிய தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்கள் தங்கள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் குறிக்கோள் குறித்தும் அறிந்து இலக்கினை அடைய அயராது உழைத்து உங்களை தயார் படுத்தவேண்டும்.

மேலும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து எடுத்துக்கூறி அதில் இணைந்து தொடர்ந்து பயின்று திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என கலெக்டர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News