உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பரமன்குறிச்சியில் விவசாயிகள்-பொதுமக்கள் சங்க ஆலோசனை கூட்டம்

Published On 2022-03-08 10:04 GMT   |   Update On 2022-03-08 10:04 GMT
உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
உடன்குடி:

உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

வட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பரமன்குறிச்சி ஊராட்சி மன்றதலைவர் லங்காபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆனந்த், மணிவண்ணன், சங்கரகுமார், வெற்றிவேல், பானு, விஜயகுமார், அஸ்வத் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

விவசாய பிரதிநிதிகளாக சந்தையடியூர் ஜெகதீஸ் தங்கராஜ் ஆசிரியர் சிவலூர்ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 

உடன்குடி வட்டார பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய திசைகளில்எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை நிறத்தில் விவசாயம் நடந்தது.

அதேபோல திரும்பவும் மாற்றவேண்டும். விவசாய விளை நிலங்களை பாதுகாக்க, உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், ஊரணிகளை மழை காலங்களில் முழுமையாக நிரப்ப வேண்டும். 

மற்ற நேரங்களில் அணை கட்டுகளில்உள்ள தண்ணீரை கொண்டு வந்துநிரப்ப வேண்டும். நமது கோரிக்கைகள் நிறைவேறவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும். அடிக்கடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரிலும். தபால் மூலமும் சந்தித்து வலியுறுத்தி வரவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறுகுளம்பணிக்குழு தலைவர் பிர்லாபோஸ் தீர்த்தியப்பன் செய்திருந்தார்.
Tags:    

Similar News