உள்ளூர் செய்திகள்
சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் தயாராக இருக்கும் மாமன்ற கூட்ட அரங்கம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 699 வார்டு உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்

Published On 2022-03-01 10:23 GMT   |   Update On 2022-03-01 10:23 GMT
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 699 வார்டு உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள 699 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  இதில் பேரூராட்சிகளில் 4 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள  695 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியில்  உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளி லும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதேபோல், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகளிலும், 31 பேரூராட்சிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

உள்ளாட்சி  தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நாளை (புதன் கிழமை) பதவி ஏற்க உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங் களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மாமன்ற உறுப்பினர் இருக்கையில் மைக் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 வார்டு உறுப்பினர்களுக்கு மாநக ராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவி களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது. இதனால் அரசியல் கட்சியினர் மத்தி யில் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News