search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி ஏற்பு"

    • மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
    • முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜஸால்:

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ந் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

    இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

    இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.

    இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

    மாநில முதல்-மந்திரியாக லால்ஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
    • தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.

    சென்னை:

    முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.

    நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .

    நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.

    நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
    • விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார்.
    பெரம்பலூர்:


    தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுல்பாளையம் தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் சங்க தலைவராக உத்திரக்குமார், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜன், துணைத் தலைவராக, செங்கமலை, துணை செயலாளராக முருகையா செயற்குழு உறுப்பினர்களாக அன்பு, கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், கண்ணன், ரவிச்சந்திரன், கலாவதி, ராதாகிருஷ்ணன், அசோகன், பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்ம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். புதிய பொறுப்பாளகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    • திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
    • கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத், சென்னை பெருநகர இணை ஆணையர் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, திருவண்ணாமலையில் பயிற்சி சப் -கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.இதனையடுத்து திண்டிவனம் ஜக்காம்பேட்டையிலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில், கட்ட ரவி தேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட அரசு வழக்கறிஞராக ஜாண்சன் இன்று நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவரிடம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்தோஷ்குமார் பொறுப்பு களை ஒப்படைத்தார். உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரிபிரின்சி லதா, முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட்,

    திற்பரப்பு பேரூர் கழக செ யலாளர் ஜாண் எபனேசர், திருவட்டார் தெற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதின், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ஆர். ராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினித் ஜெரால்ட்,

    ஒன்றிய துணை செயலாளர் காந்தி, பொன்மனை பேரூர் செயலாளர் சேம் பெனட் சதீஷ், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு, மாவட்ட பிரதிநிதி பொன். ஜேம்ஸ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஜாஹீர் உசேன், தி.மு.க. உறுப்பினர் வெண்ட லிகோடு சூர்யகுமார், மகளிர் அணியை சேர்ந்த தங்கரமணி, புனிதா, குமாரி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

    ×