என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக தலைவர் பதவி"
- புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
- கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பா ஜனதா மாநில தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி. ராமலிங்கம் பா.ஜனதா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை முறையாக அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) மாலை பதவி ஏற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்கும் விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. அங்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அறையில் 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து, முதலியார் பேட்டை சுகன்யா கன்வென்சன் சென்டரில் பா.ஜனதா புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு மற்றும் புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
விழாவில் பா.ஜனதா அகில இந்திய பொது செயலாளர் தருண் சுக், மேலிட பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணி விழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நெல்லையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
அரசியல் தலைவர்களை கைது செய்வதில் அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதா? என்பதை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சில் இடம்பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் வெளியே வருவார்.
பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பஸ் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட பெட்ரோலுக்கான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முயற்சி செய்யலாம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர ஆதரவு தரலாம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது.
ரபேல் விமான விவகாரம் பற்றி மத்திய மந்திரிகள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு இடம் இல்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை தந்தால் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தற்போது உள்ள நிலையைவிட கட்சியை வலுப்படுத்துவேன் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘இதற்கு பதில் சொல்வதை விட சிரித்துவிட்டு விட்டுவிடலாம். பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ள அவர், நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். பா.ஜ.க. தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவான விஷயமா?’ என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher






