உள்ளூர் செய்திகள்
நடைபாதை அமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

காவலர் குடியிருப்பு மைதானத்தில் நடைபாதை- கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-25 09:49 GMT   |   Update On 2022-01-25 09:49 GMT
ஆயுதப்படை காவலர் குடியிருப்பு மைதானத்தில் நடைபாதை அமைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய செயல்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  

முறையாக குப்பைகளை தரம் பிரித்து இயற்கை முறையில் உரம் தயாரித்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அந்த இடத்தினை மேலும் அழகுபடுத்தும் விதமாக பல வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கும் முறை குறித்தும் பணியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து 276 மீட்டர் நீளத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் நடைபாதை பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

இதேப்போல், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் மேற்கொள்ளவேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News