உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்கு வெவ்வேறு வகை உணவுகள்

Published On 2022-01-21 09:46 GMT   |   Update On 2022-01-21 09:46 GMT
திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இட்லி, மிளகு பொங்கல், கொத்தமல்லி, சாதம், பிரியாணி என தினந்தோறும் வெவ்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர்:

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இட்லி, மிளகு பொங்கல், பிரியாணி உட்பட பல சத்துள்ள உணவுகளை வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை வேகமாகப் பரவி வருகிறது.தினமும் 100&க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டு திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான உணவு வழங்க பட வேண்டும் என திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி திங்கட்கிழமை காலை இட்லி, புதினா சட்னி, மதியம் அரிசி சாதம், முருங்கைக்கீரை குழம்பு, கேரட் பொரியல், மிளகு ரசம், இரவு கோதுமை உப்புமா, தக்காளி இஞ்சி சட்னி.

செவ்வாய்க்கிழமை மிளகு பொங்கல், கொத்தமல்லி சட்னி, மதியம் புதினா சாதம், தக்காளி சாதம், அவரைக்காய் பொரியல், இரவு இடியாப்பம், காய்கறி குருமா.

புதன்கிழமை காலை காய்கறி ரவா கிச்சடி, வேர்கடலை சட்னி, மதியம் சாதம், முருங்கைக்காய் காரக்குழம்பு, பீட்ரூட் பொரியல், தக்காளி ரசம், இரவு தேங்காய் சட்னி, வியாழக்கிழமை தக்காளி பொங்கல், கொத்தமல்லி சட்னி, வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, இரவு சாமை அரிசி உப்புமா, புதினா சட்னி.

வெள்ளிக்கிழமை இட்லி, புதினா சட்னி, முருங்கைக்கீரை குழம்பு, அரிசி சாதம், பீன்ஸ் பொரியல், தூதுவளை ரசம், இரவு சப்பாத்தி பருப்பு கடைசல்.

வெள்ளிக்கிழமை காலை இட்லி, புதினா சட்னி, பீன்ஸ் பொரியல், தூதுவளை ரசம், முருங்கைக்கீரை குழம்பு சாதம், இரவு சப்பாத்தி பருப்புக் கடைதல்.

சனிக்கிழமை தினைப் பொங்கல், தேங்காய் கடலை சட்னி, மதியம் நெல்லிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், வாழைப்பூ பொரியல், இரவு இட்லி சின்ன வெங்காய சாம்பார் வழங்க வேண்டும்.

இதேபோன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோதுமை ரவா பொங்கல், கொத்தமல்லி சட்னி, மதியம் பிரியாணி, எண்ணெய் கத்திரிக்காய், இரவு இடியாப்பம், தக்காளி பூண்டு சட்னி, இத்துடன் காலை மாலை தேநீர், கபசுர குடிநீர் மற்றும் உணவு வகைகள் வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News