உள்ளூர் செய்திகள்
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

Published On 2022-01-19 10:32 GMT   |   Update On 2022-01-19 10:32 GMT
திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் குளக்கரையில் பக்தர்களுக்கு தர்ப்பணம் மற்றும் நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

தற்போது கோயில் குளத்தில் விடப்பட்டிருந்த மீன்கள் நன்கு வளர்ந்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை காணப்படுகிறது.

இந்த நிலையில் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இன்று காலை செத்து மிதந்தன. சுமார் 1 டன் எடை கொண்ட மீன்கள் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News