உள்ளூர் செய்திகள்
முருகன் கோவிலில் நடை சாத்தப்பட்டுள்ளதையும், பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

தைப்பூச விழா தரிசனத்திற்கு தடை - திருப்பூரில் களையிழந்த முருகன் கோவில்கள்

Published On 2022-01-18 07:43 GMT   |   Update On 2022-01-18 07:43 GMT
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கணகிரி முருகன் கோவில், சிவன்மலை முருகன் கோவில், ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோவில், அலகு மலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.   

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் நடை சாத்தப்பட்டது. பூசாரிகள் மட்டும் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.  

தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் முருக பக்தர்கள் ஏமாற்ற மடைந்தனர். பக்தர்கள் பலர் கோவிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் உள்ள முருகன் கோவில்களில் வழிபாடு நடத்திவிட்டு செல்வார்கள். 

ஆனால் தடை காரணமாக இந்த ஆண்டு முருகன் கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் களையிழந்து காணப்பட்டன. திருப்பூர் வாலிபாளையம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.   
Tags:    

Similar News