உள்ளூர் செய்திகள்
செம்மொழி பூங்கா

கோவையில் 165 ஏக்கரில் அமைய உள்ள செம்மொழி பூங்கா

Published On 2022-01-16 06:35 GMT   |   Update On 2022-01-16 06:35 GMT
கோவையில் பலவித தோட்டங்கள், பூங்காக்கள், வரலாற்று மியூசியத்துடன் செம்மொழி பூங்கா அமைகிறது.

கோவை:
 
கோவையில் புதிய அடையாளம் என்ற வகையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கப்பட உள்ளது. கோவையில் பலவித தோட்டங்கள், பூங்காக்கள், வரலாற்று மியூசியத்துடன் சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமையவுள்ளது. 

இதற்காக முதற்கட்ட மாக 45 ஏக்கரில் திட்டப் பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். இதில் அரோமா பூங்கா, பாறை பூங்கா, தோட்டக்கலை பூங்கா, மூலிகை பூங்கா, மலர் பூங்கா என பல்வேறு பூங்காக்களும், 11.50 ஏக்க ரில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்படும். இதற்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.சிறப்பு அம்சமாக வரலாற்று மியூசியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தாவரவியல் நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆலோசனை பெற்று பணிகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறை வளாகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சிறை வளாகத்தில் அலுவலர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் காலியிடங்கள் இருக்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் வசம் இருக்கிறது. 

சிறை கண்காட்சி மைதானம், பஸ் ஸ்டாண்டை ஒட்டி உள்ள பகுதி, பாலசுந்தரம் ரோட்டில் சில பகுதிகளில் கட்டுமானங்கள் இருக்கிறது.  இவற்றை செம்மொழி பூங்காவிற்காக அகற்றுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா மிக பிரம்மாண்டமாக அமைய இருப்பதால் பல்வேறு மரங்களை நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில வகை மரங்களை இடம்பெயர்ந்து கொண்டு வந்து அமைக்க முடியுமா என வேளாண் துறையினர் ஆலோசிக்க உள்ளனர்.  மல்டி லெவல் பார்க்கிங் திட்டமும் மைதான வளாகத்தில் அமைக்கப்படும். திட்ட அறிக்கை தயாரிப்புக்கேற்ப இறுதி முடிவு எடுக்க மாவட்ட நிர்வாகம்  திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News