உள்ளூர் செய்திகள்
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்

பாலக்கோடு அருகே பரபரப்பு: லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-09 08:20 GMT   |   Update On 2022-01-09 08:20 GMT
பாலக்கோடு அருகே தரைபாலம் அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
பாலக்கோடு: 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன் கொட்டாய், காந்திநகர், காமராஜ் நகர், கே.செட்டி அள்ளி, தோமலஅள்ளி, பில்ல கொட்டாய், வீரபத்திரன் கோவில் உள்ளிட்ட 12 கிராம மக்களின் சாலை வழியை மறித்து புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் விவசாய வாகனங்கள், உழவு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வர தரைப்பாலம் அமைத்து தருவதாக அதிகாரிகள் உத்திரவாதம் அளித்திருந்த நிலையில் தரைப்பாலம் அமைக்காமல்  திடீரென்று இரவோடு இரவாக சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால்  ஆத்திரமடைந்து  சாலை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சாலை விரிவாக்க அதிகாரிகள் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அநத பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News