உள்ளூர் செய்திகள்
கைது

ஆற்றில் குளிக்க சென்ற இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்கள் கைது

Update: 2022-01-04 05:27 GMT
ஆற்றில் குளிக்க சென்ற இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து பில்லூர் அணை போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை:

கோவை அத்திக்கடவை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளி.

வழக்கமாக இளம்பெண் அந்த பகுதியில் உள்ள பவானி ஆற்றிக்கு குளிக்க செல்வது வழக்கம். இதேபோல சம்பவத்தன்று இவர் பவானி ஆற்றிக்கு குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் அருகே வந்தனர். பின்னர் அவரை உல்லாசத்துக்கு அழைத்தனர். அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார்.

இதனை அவர்கள் இளம்பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்தும் கத்தியை காட்டி அவரை மிரட்டியும் அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த வாலிபர்கள் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை மிரட்டி விட்டு மொபட்டில் தப்பி ஓட முயன்றனர்.

வாலிபர்கள் 2 பேரையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்து அவர்களை பில்லூர் அணை போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மன்னார்காட்டை சேர்ந்த வேலாயுதம் என்பவரது மகன் ராஜேஷ் (வயது 22), தென்கரையை சேர்ந்த ஊழி என்பவரது மகன் அனீஸ் (25) என்பது தெரிய வந்தனர்.

அவர்கள் மீது பில்லூர் அணை போலீசார் இளம்பெண்ணிடம் தகறாக நடக்க முயற்சித்தல், ஆபாசமாக பேசுதல், ஆடையை பிடித்து இழுத்தல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News