உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

ஒமைக்ரானால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2021-12-31 05:29 GMT   |   Update On 2021-12-31 07:45 GMT
மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பரவி வரும் ஒமைக்ரான் நோய் தொற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் நோய் தடுப்புக்காக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.



இப்போது ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் பொதுமக்களின் போக்குவரத்தாலும், கூட்ட நெரிசலாலும் நோய் தொற்று அதிகமாக பரவலாம். எனவே தமிழக அரசு, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News