உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

வாஜ்பாய் பிறந்தநாள் விழா

Update: 2021-12-25 09:34 GMT
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தாராபுரம்:

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி தாராபுரம் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் பொன்.ருத்திரகுமார் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விஜயகுமார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் 30 பேர் ரத்த தானம் செய்தனர். இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
Tags:    

Similar News