உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை கருத்தரங்கம்

Published On 2021-12-20 07:42 GMT   |   Update On 2021-12-20 07:42 GMT
கருத்தரங்கு ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா செய்திருந்தார்.
அவிநாசி:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில் ‘பைத்தான்’ மற்றும் ‘வெப் டிசைனிங்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், வரவேற்றார். 

கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். இதில் ‘லைவ் வயர்’ நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், தொழில்நுட்ப அலுவலர் கிருஷ்ணன், வேலை வாய்ப்பு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்பு குறித்தும் பாட திட்டம் மற்றும் வேலை வாய்ப்புக்கு இடையேயான இடைவெளியை போக்கும் வகையில் தங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

தற்கால சூழலுக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு தயாராக இருந்தால் வாய்ப்பு வரும் போது சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா செய்திருந்தார்.
Tags:    

Similar News