உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த அங்காளம்மன்நகர், கருப்பகவுண்டம்பாளையம் பகுதி பொதுமக்கள்.

மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Published On 2021-12-13 09:32 GMT   |   Update On 2021-12-13 09:32 GMT
அரசு பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை இருப்பதால் மின்மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் அங்காளம்மன் நகர் ,பெருந்தொழுவு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஒரு சிலர் மின் கம்பங்கள் நடப்படும் இடம் தங்களின் சொந்த இடம் என கூறியதால் மின் கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது. 

இதனால் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகவும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் 54-வது வார்டு  கருப்பன்கவுண்டம்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்மயானம் அமைக்க கோரி மாநகராட்சி மூலம் மண் பரிசோதனை நடைபெற்றுள்ளது. 

ஆனால் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும். குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அரசு பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை இருப்பதால் அப்பகுதியில் மின்மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். 
Tags:    

Similar News