உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மனிதர்கள் உயிர்வாழ உயிரினங்களே ஆதாரமாக உள்ளன-இயற்கை அமைப்பின் தலைவர் பேச்சு

Published On 2021-12-06 07:35 GMT   |   Update On 2021-12-06 07:35 GMT
உலகில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாம்பூச்சிகளும், தமிழகத்தில் 370-க்கும் மேற்பட்ட இனங்களும் உள்ளன.
திருப்பூர்:

பல்லடம் அருகே காரணம்பேட்டை- சங்கோதிபாளையத்தில் உள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் பட்டாம் பூச்சிகளை வகைப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் தலைவர் பாவேந்தன் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

உலகில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாம்பூச்சிகளும், தமிழகத்தில்  370க்கும் மேற்பட்ட இனங்களும் உள்ளன. பட்டாம்பூச்சிகள், மனிதனின் உணவு உற்பத்திக்கு பல்வேறு வகையில் உதவுகின்றன.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் எண்ணற்ற உயிரினங்கள் மறைந்து வருகின்றன.மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் உயிரினங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் உயிர்வாழ உயிரினங்களே ஆதாரமாக உள்ளன என்பதை மறுக்க இயலாது என்றார்.
Tags:    

Similar News