செய்திகள்
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தொடர் மழை எதிரொலி- 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-09 03:35 GMT   |   Update On 2021-11-09 05:48 GMT
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்திருந்த நிலையில், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், இன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால்,  சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பிற மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்திருந்த நிலையில், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை, விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News