செய்திகள்
சாலை மறியல்

போடியில் இருதரப்பினர் மோதல் - அரசு பஸ் கண்டக்டரை தாக்கியதால் சாலை மறியல்

Published On 2021-10-30 09:20 GMT   |   Update On 2021-10-30 09:20 GMT
போடியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியதால் போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே நேற்றிரவு ஒரு தரப்பினர் மோட்டார் சைக்கிளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தி கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சில்லமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் பைக்கில் வந்த கும்பல் அந்த பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சென்றுவிட்டனர்.

இதனை கண்டித்து அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். அப்போது போடியில் இருந்து தேவாரம் நோக்கி சென்ற அரசுபஸ்சை மறித்தனர். கண்டக்டர் திருப்பதி அவர்களை எச்சரித்து வழிவிடுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கண்டக்டரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தகவல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் கண்டக்டர் திருப்பதியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி டி.எஸ்.பி சுரேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ராமலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் சூப்பிண்டு பிரவீன்டோங்கரே உமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டார்.

மேலும் படுகாயமடைந்த கண்டக்டரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Tags:    

Similar News