இந்தியா

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?

Published On 2024-05-22 14:03 GMT   |   Update On 2024-05-22 14:03 GMT
  • 8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
  • முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த மக்களவை தேர்தலில் 8,337 வாக்காளர்கள் களம் காண்கிறார்கள். இதில் 9.55 சதவீத பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரவுகளை பகிர்ந்துள்ளது.

8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலில் அதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. அதற்கு காரணம் மசோதா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான்.

முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். இது 10 சதவீதத்திற்கும் குறைவு. இதேபோல்தான் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலிலும் தொடர்ந்தது.

2-வது கட்ட தேர்தலில் 1,198 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 100 பெண் வேட்பாளர்கள்.

3-வது கட்ட தேர்தலில் 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 123 பெண் வேட்பாளர்கள்.

4-வது கட்ட தேர்தலில் 1,717 பேரில் 1,710 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்ததில் 170 பெண் வேட்பாளர்கள்.

5-ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 82 பெண் வேட்பாளர்கள்.

6-ம் கட்ட தேர்தலில் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 92 பெண் வேட்பாளர்கள்.

கடைசி கட்ட தேர்தலில் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 95 பெண் வேட்பாளர்கள்.

Tags:    

Similar News