செய்திகள்
கோப்புபடம்

சுங்கவரி வர்த்தக குறியீடு விளக்க கூட்டம் - திருப்பூரில் நாளை நடக்கிறது

Published On 2021-10-27 07:30 GMT   |   Update On 2021-10-27 07:30 GMT
திருப்பூர் ஜவுளிக்குழு உதவி இயக்குனர் பரமேஸ்வரன், பின்னலாடைகளுக்கான சர்வதேச குறியீடு குறித்து பேசுகிறார்.
திருப்பூர்:

சர்வதேச வர்த்தகத்தில், சுங்கவரி நோக்கத்துக்கான வர்த்தக குறியீடு குறித்த விளக்க கூட்டம் நாளை நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை)  மாலை 4 மணிக்கு நடக்கிறது. 

திருப்பூர் உதவி கமிஷனர் சம்பத், குறியீட்டின் முக்கியத்துவத்தைவிளக்கி பேசுகிறார். திருப்பூர் ஜவுளிக்குழு உதவி இயக்குனர் பரமேஸ்வரன், பின்னலாடைகளுக்கான சர்வதேச குறியீடு குறித்து பேசுகிறார்.

இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்க மக்கள் தொடர்புத்துறை தலைவர் செந்தில்குமார் கூறுகையில்:

‘சர்வதேச வர்த்தக குறியீட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கும் வகையில், ‘ஜூம்‘ மீட்டிங் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், https://bit.ly/2ZgejbT என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Tags:    

Similar News