செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

Published On 2021-10-04 06:14 GMT   |   Update On 2021-10-04 06:14 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,056-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.4,382-க்கு விற்பனையாகிறது. இது பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35,056-க்கு விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளியின் விலையில் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.64.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையில் ரூ.200 உயர்ந்து ரூ.64,800-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News