செய்திகள்
அபராதம்

திருவள்ளூரில் ஹெல்மெட் அணியாத 250 பேருக்கு அபராதம்

Published On 2021-09-29 08:46 GMT   |   Update On 2021-09-29 08:46 GMT
தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைகவசம் குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் பிரவலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தலைக்கவசம் (ஹெல்மெட்), முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், இருசக்கர வாகனத்தில் பக்க கண்ணாடிகள் இல்லாத வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் உள்பட பல்வேறு சாலை விதி மீறல்களில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட நபர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைகவசம் குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News