செய்திகள்
கோப்புபடம்

சாலை விபத்து புள்ளி விவரம் சேகரிக்கும் செயலி அறிமுகம்

Published On 2021-09-17 04:23 GMT   |   Update On 2021-09-17 04:23 GMT
செயலி பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர்:
 
சாலை விபத்து தடுக்கவும், தேவையான சாலை வசதியை செய்ய திட்டமிடவும் வசதியாக ஒருங்கிணைந்த சாலை விபத்து புள்ளிவிவரம் சேகரிக்கும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு சாலை விபத்துகளையும், போட்டோ, வீடியோ ஆதாரத்துடன் நேரடியாக இணையதளத்தில் பதிவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. போலீசார், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் இந்த செயலி மூலம் சாலை விபத்து தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கலாம்.

இந்த செயலி பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம்  திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேசிய தகவலியல் மைய பொது மேலாளர் கண்ணன், செயலி பயன்பாடு குறித்து விளக்கினார். 

திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள்,போலீசார் பங்கேற்றனர். செயலி வாயிலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து ‘பவர் பாயின்ட்’ மூலமாக, பயிற்சி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News