செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2021-09-02 08:30 GMT   |   Update On 2021-09-02 10:04 GMT
மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.


அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இது மருத்துவக்கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News