என் மலர்
நீங்கள் தேடியது "Minister Ma Subramanian"
- டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது.
- டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைகளை 'அவுட்சோர்சிங்' முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டயாலிசிஸ் சிகிச்சை அவுட்சோர்சிங் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
* டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது.
* டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
* தனியாருக்கு விடும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
- சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
* 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்.
* சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
* மருத்துவப்படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.
- ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் கடந்த 2002-ம் ஆண்டு துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது.
அப்போது எதிர்கட்சியாக இருந்த இருந்த தி.மு.க. உறுப்பினர்கள், சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை தாக்கியதாகவும், இதில் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அ.தி.மு.க. மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தற்போது அமைச்சராக இருக்கும் முன்னாள் கவுன்சிலர் மா.சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் சிலர் பிறழ் சாட்சிக ளாகவும் மாறினர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் இன்று வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
- காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
* சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
* காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
* தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதமாக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 28.02 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்.
- உதவி பேராசிரியர்களாக இருந்த 296 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்.
* ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
* உதவி பேராசிரியர்களாக இருந்த 296 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
* மருத்துவ துறையில் ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுகலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் வருகிற 27-ந்தேதி (புதன்) கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 182 வட்டங்கள் உள்ளன. இந்த 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்தந்த வட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மூத்த பேச்சாளர்கள் 182 பேர் பங்கேற்கிறார்கள். மேலும் 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்றவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 182 பேச்சாளர்களும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான 27-ந் தேதி 142-அ வட்டத்தில் கே.பி.கோயில் தெருவில் வீடியோ எஸ்.எழில் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தாயகம் எம்.எல்.ஏ., எபினா மேரி ஆகியோரும் 127-வது வட்டம் கோயம்பேடு பஜனை கோவில் தெருவில் பொன்.வர லோகு தலைமையில் நடக்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா, அஜித்குமார் ஆகியோரும் பேசுகிறார்கள்.
இதே போல் 173-அ வட்டம் இந்திரா நகரில் மு.ப. நடராஜன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு இறைவன், செ.தமிழரசன், 182-வது வட்டம் கந்தன் சாவடியில் ஆறுமுகம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் வி.பி.ராஜன், விஜயகுமார், 91-வது வட்டம் முகப்பேர் மேற்கில் அண்ணதாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாறன், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் சீனிவாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சைதை சாதிக், எஸ்.விக்டோரியா ஆகியோரும் பேசுகிறார்கள்.
30 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.
- ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
- 2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வீட்டுவசத்தித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியார் மருத்துவர் அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து கி.வீரமணியின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாளவாடி ஆசனூர் பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.
இப்பகுதியில் 118 கிராமங்கள் உள்ளன. இதில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் கடந்த முறை வந்த போது இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இப்போது அந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தாளவாடி பகுதியில் அரசு மருத்துவமனையில் ஒரு பிணவறை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மலைப்பகுதியில் மாதத்திற்கு 2 அல்லது 3 இறப்பு ஏற்படுகிறது. அந்த உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிணவறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று நானும் அமைச்சர் முத்துசாமியும் ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை கட்டிடம், உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 பேர் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
- மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.
நெல்லை:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 'பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லையில் சுமார் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் 450 படுக்கை வசதிகள், 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் என்ற 22 புதிய மருத்துவமனைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் மற்றும் உதவியாளர் என 4 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் முதலமைச்சரால் 12 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,353 மருத்துவ பணியிடங்கள் மற்றும் 2026-ம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர்கள் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.
மேலும் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் 2,250 நிரப்பப்படும். இது சம்பந்தமாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.
- இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னையை அடுத்த குன்றத்தூர் மணஞ்சேரி தேவேந்திரன் நகர் பகுதியில் எலி மருந்தில் இருந்து வெளியேறிய கடுமையான நெடி காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது. இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
* அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோரை முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை தருமாறு சிபாரிசு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில் சிசிடிவியுடன் கூடிய 2 கட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்.
* பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அப்போது மேஜையில் தமிழக வெற்றிக்கழகத்தின் வண்ணத்திலான போர்வை போர்த்தப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து அப்போர்வை அகற்றப்பட்டு மாற்று போர்வை மேஜை மீது போர்த்தப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.