என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பரம்பாக்கம் ஏரி"

    • மொத்த கொள்ளளவான 3.64 டிஎம்சியில் தற்போது 3.25 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது.
    • நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.

    சென்னை:

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 2 மணியளவில் 2,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

    வானிலை மைய முன்னறிவிப்பின் படி வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 17.11.2025 காலை 8.00 மணி அளவிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 20.11.2025 அன்று முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.

    இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 2164 அடியாகவும், கொள்ளளவு 3025 மில்லியன் கனஅடியாகவும் (82.99%) உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து நண்பகல் 12 மணி நிலவரப்படி 150 கனஅடியாக உள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 28.11.2025, 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் சென்னை குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) ஏரியிலிருந்து 29.11.2025 நண்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.

    • தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி நிரம்பியது.

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி நிரம்பியது.

    ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    வரும் நாட்களில் சென்னையில் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வருகிறது.
    • சென்னையில் கடந்த 5 நாட்களில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    சென்னை:

    சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையார் பெசன்ட் நகர் கடற்கரை முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்தார். அவருடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலானா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர்.

    ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாவட்ட அளவிலான மாநில அளவிலான அலுவலர்கள் என்று ஆயிரம் பேர் அளவிற்கு கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் தந்து அதற்கான குறிப்புகள் எல்லாம் அவர்கள் இடத்தில் தந்து அனுப்பப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற மழைநீர் வடிகால்வாய்கள் குறிப்பாக நீர்வள ஆதாரத்துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று அனைத்து துறைகளின் சார்பிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அரசு பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவிலான பாதிப்புகளில் இருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வருகிறது.

    5300 கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. அடையாறு பொருத்தவரை 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கரையோரம் உள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். தற்போது 40,000 கன அடி தண்ணீர் வந்தால் கூட குடியிருப்பு பகுதிகளை பாதிக்காது.

    இந்த முகத்துவாரத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் கொண்டு வர முடியும். வடகிழக்கு பருவமழை முடியும் வரை மூன்று பொக்லைன் எந்திரங்கள் இங்கு அகலப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

    சென்னையில் கடந்த 5 நாட்களில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு இடத்திலும் கூட மழை நீர் சூழ்ந்து மக்களை பாதிக்கவில்லை.

    முகத்துவாரத்தை சீர்படுத்தும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் கனஅடி மணல் எடுக்கப்பட்டதன் மூலம் சீனிவாசபுரம் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் வெள்ளநீர் வெகு வேகமாக கடலில் கலப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கடிஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21.27 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக உள்ளது. 

    • ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தகவல் சொல்லவில்லை என்றார்.
    • எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது சலசலப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு என்னிடத்தில் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு சொல்லாமல் நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

    • 3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
    • ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,800 கன அடியாக இருந்த ஏரிக்கான நீர்வரத்து தற்போது விநாடிக்கு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.

    3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

    • செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    தொடர் கனமழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    • 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

    இந்த நிலையில், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய பின்னர், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6,682 மில்லியன் கன அடி. அதாவது 56.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று நிலவரப்படி 2,456 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,251 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    மேலும், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 274 மில்லியன் கன அடியும்,சோழவரம் ஏரியில் 157 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கு சராசரியாக ஒரு டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், தற்போது 6 டி.எம்.சி. குடிநீர் இருப்பு உள்ளது.

    மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம், தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், நிகழாண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
    • சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

    சென்னை:

    புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும்.

    தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2.71 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.51 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 0.78 டி.எம்.சி. தண்ணீரும், சோழவரம் ஏரியில் 0.18 டி.எம்.சி. தண்ணீரும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பில் உள்ளது.

    5 ஏரிகளிலும் மொத்தம் 6.68 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை 6 மாதங்கள் பூர்த்தி செய்ய முடியும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    தற்போது கடந்த ஆண்டை விட 2.82 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    குன்றத்தூர்:

    பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கும். அவ்வாறு ஏரியில் நீர் நிரம்பும் நிலையில் உபரி நீர் திறப்பது வழக்கம் இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு புதிதாக வண்ணம் பூசி புதுப்பிக்கும் பனி நடந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷர்ட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    வண்ணம் பூசும் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதகுகளின் ஷர்ட்டர்கள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடி நீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து அதன் பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உபரி நீர் திறந்துவிடுவதை ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டார்
    • புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்தும், பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது.
    • பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேற்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டது.

    முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிக ளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர்மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடியாக இருந்த நீர்வரத்து 811 கன அடியாக குறைந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,817 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    தொடர்ந்து பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உபரி நீர் வெளியேறும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ×