முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி

தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி நிரம்பியது.
முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி
Published on

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி நிரம்பியது.

ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வரும் நாட்களில் சென்னையில் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com