செய்திகள்
அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதாவில் 17 பேர் குழு- அண்ணாமலை அறிவிப்பு

Published On 2021-08-05 04:12 GMT   |   Update On 2021-08-05 08:25 GMT
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு கட்சியும் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றன.

அதன்படி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக்குழுவை அமைத்துள்ளார்.



அந்த குழு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், செல்வகுமார், ராமஸ்ரீனிவாசன், நாகராஜன், மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



Tags:    

Similar News