செய்திகள்
கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கோவளத்தில் பயங்கர கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2021-08-03 09:16 GMT   |   Update On 2021-08-03 09:16 GMT
கடல் அலை சீற்றத்தினால் கோவளத்தில் உள்ள தூண்டில் வளைவு பாலம் உடைந்து சேதமடைந்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் 100-க்கும் மேற்பட்ட வள்ளங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வார காலமாக கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

கோவளத்தில் இன்றும் கடல் சீற்றமாக இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

இந்த கடல் அலை சீற்றத்தினால் கோவளத்தில் உள்ள தூண்டில் வளைவு பாலம் உடைந்து சேதமடைந்தது. இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

100-க்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல கன்னியாகுமரி வாவதுறை சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.



Tags:    

Similar News