செய்திகள்
தங்கம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

Published On 2021-07-15 05:31 GMT   |   Update On 2021-07-15 05:31 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,456-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து குறைந்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து விலை உயர்ந்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 296-க்கு விற்றது.

இந்தநிலையில் தங்கம் விலையில் இன்று 3-வது நாளாக உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 456-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 557 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 400-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்றது.

Tags:    

Similar News