செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கப்பட்ட காட்சி.

திருப்பூருக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க முதல்வர் உறுதி- ஏ.இ.பி.சி.,தகவல்

Published On 2021-06-16 07:53 GMT   |   Update On 2021-06-16 07:53 GMT
கொரோனா ஒழிப்பில் முதல்வர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
திருப்பூர்:

நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்களை உறுப்பினராக கொண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) இயங்குகிறது. இதன் சார்பில் சமீபத்தில் திருப்பூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து முதல்வர் நிவாரண நிதிக்காக 2-வது தவணையாக ரூ.1 கோடியே 30 லட்சத்து 37 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினர்.

அப்போது சக்திவேல் கூறுகையில், 

கொரோனா ஒழிப்பில் முதல்வர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இது மக்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் துவக்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை ஏ.இ.பி.சி., முன்னெடுத்து செல்கிறது.திருப்பூருக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என முதல்வரிடம், கோரிக்கை விடுத்துள்ளோம். நிறைவேற்றிவைப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News