செய்திகள்
மருத்துவ முகாம்

திருப்பத்தூரில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்

Published On 2021-06-09 13:09 GMT   |   Update On 2021-06-09 13:09 GMT
தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர்:

தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சித்த மருத்துவ தடுப்பு முகாம் வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை திருப்பத்தூர் கோட்டை தெருவில் நகராட்சி பள்ளியிலும், 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சி.கே.சி. நகர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியிலும், 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை, கபசுரக்குடிநீர், சித்த மருந்துகள், 5 மூலிகைகள் கொண்ட மூலிகை குடிநீர், இஞ்சி சாறு தேன் கலவை வழங்கப்படுகிறது. மூலிகை தூப புகை போடப்பட்டு நோயாளிகளை வாசிக்கவைப்பது, கொரோனா நோயாளிகளுக்கு வாசனை அற்ற நிலையை போக்க ஓமப்பொடி வழங்கப்படுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சிவன்அருள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News