செய்திகள்
தேவை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.

சாலையில் சுற்றி திரிந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

Published On 2021-06-08 01:19 GMT   |   Update On 2021-06-08 01:19 GMT
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஒரே நாளில் வாகன ஓட்டிகள் சுமார் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேலம்:

தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.

அதனை பார்க்கும் போது ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டு விட்டதோ என்ற எண்ணம் தோன்றியது. அந்த அளவுக்கு ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றி திரிந்தனர். அவர்களில் தேவை இல்லாமல் சாலையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். அதேநேரத்தில் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அங்கு ஒரு ஆட்டோவில் மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். மொபட், மோட்டார் சைக்கிளில் தேவை இல்லாமல் சாலையில் சுற்றி திரிந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் கட்டாய கொரோனா பரிசோதனை செய்தனர்.

போலீசார் வாகனங்களை மறித்ததால் அபராதம் விதித்து விட்டு விடுவித்து விடுவார்கள் என்று ஒருசிலர் நினைத்தனர். ஆனால் அபராதம் விதித்ததோடு மட்டும் அல்லாமல் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஒரே நாளில் வாகன ஓட்டிகள் சுமார் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News