செய்திகள்
கொரோனா வைரஸ்

தொண்டாமுத்தூர் அருகே அரசு பள்ளியை கொரோனா மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2021-06-06 10:41 GMT   |   Update On 2021-06-06 10:41 GMT
அரசு மேல்நிலைப் பள்ளியை கொரோனா வார்டாக மாற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்தவராயபுரம் ஊராட்சி செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூத்தவரானம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை கொரோனா வார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக பள்ளியை பார்வையிட்ட தொண்டாமுத்தூர் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மக்களிடம் கொரோனா மையமாக்க கேட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளியை கொரோனா வார்டாக மாற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்தவராயபுரம் ஊராட்சி செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறுகையில், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கிரிமிட்டோரியம் மற்றும் மருத்துவமனை அருகில் குடியிருப்புகள் இருப்பதால் தொற்று எளிதில் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு பள்ளியை கொரோனா மையமாக மாற்ற கூடாது என்றனர்.இதானல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News