செய்திகள்
கோப்புபடம்

டெல்டா மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா - இதுவரை 1016 பேரும் பலி

Published On 2021-05-30 11:49 GMT   |   Update On 2021-05-30 11:49 GMT
டெல்டா மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதித்த 18,729 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 760 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 7,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 506 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 563 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 743 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிககப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 652 ஆக உயர்ந்தது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 2 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 188 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 5860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் நேற்று 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 562 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 709 ஆக உயர்ந்தது. தற்போது 5,238 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவக்கு பலி எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News