செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு சாலை ஓவியங்கள்

திருவள்ளூரில் போலீசார் சார்பாக கொரோனா விழிப்புணர்வு சாலை ஓவியங்கள்

Published On 2021-05-29 10:43 GMT   |   Update On 2021-05-29 10:43 GMT
திருவள்ளூர் காமராஜர் சாலை, திருவள்ளூர் ஆயில் மில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே என மூன்று இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீசார் ஓவியர்கள் சங்கங்கள் மூலம் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளான திருவள்ளூர் காமராஜர் சாலை, திருவள்ளூர் ஆயில் மில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே என மூன்று இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில் கொரோனாவை ஒழிப்போம், முக கவசம் உயிர் கவசம் என்ற வாசகம் வரையப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ராக்கி குமாரி மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News