செய்திகள்
ஆக்சிஜன் உற்பத்தி

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

Published On 2021-05-13 12:37 GMT   |   Update On 2021-05-13 12:47 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என ஏற்கெனவே கூறியிருந்தேன். அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம்.
அரசின் பல்வேறு முயற்சியால் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. ஒடிசா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணிகளுக்கென கட்டளை மையம் தொடங்கப்பட்டது. நோய்த் தொற்று அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.

"மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும்.

முழு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா என்பதை கட்சி பிரதிநிதிகள் கூறலாம். போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News