செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருந்த காட்சி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழப்பு

Published On 2021-05-13 05:21 GMT   |   Update On 2021-05-13 05:21 GMT
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஏராளமான ஆம்புலன்சுகள் குவிந்திருந்தன. ஆம்புலன்சுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் நோயாளிகள் சுவாசித்து கொண்டிருந்தனர். எப்படியாவது ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்தில் உறவினர்களும் தவிப்புடன் இருந்தனர். இந்தநிலையில் அதில் சில ஆம்புலன்சுகளில் சிலிண்டர்களில் இருந்த ஆக்சிஜன் திடீரென தீர்ந்து போனது. இதனால் சுவாசம் தடைபட்டு கொரோனா நோயாளிகள் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியாளர்களும், மருத்துவ பணியாளர்களும் நோயாளிகளை காப்பாற்ற தொடர்ந்து போராடினர். ஆனால் நேற்று துரதிருஷ்டவசமாக முதலில் 4 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து 6 மணிக்கு மேல் மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News