செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் விநியோகம் தொடங்கியது

Published On 2021-05-13 01:58 GMT   |   Update On 2021-05-13 06:47 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.
தூத்துக்குடி:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.


 
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. இன்று காலை 7 மணி அளவில் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன்  மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகம் பணியை தொடங்கி வைத்தார். 
Tags:    

Similar News