செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2021-05-08 08:38 GMT   |   Update On 2021-05-08 13:04 GMT
2 வாரத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
சென்னை:

‘முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பீர்’ என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

* கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு போராடி வருகிறது.

* கொரோனா பரவல் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. 2 வாரத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.



* முழு ஊரடங்கை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவோம்.  முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள பொருட்களை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கொரோனா சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News