செய்திகள்
மது வாங்க வேண்டுமே என்ற அவசரத்தில் மதுக்கடை முன்பு நேற்று திரண்டிருந்த மதுப்பிரியர்களை படத்தில் காணலாம்.

12 மணிக்கு கடைகள் மூடல்: மது வாங்கும் அவசரத்தில் கொரோனாவை மறந்த மதுப்பிரியர்கள்

Published On 2021-05-07 15:03 GMT   |   Update On 2021-05-07 15:03 GMT
புதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று 12 மணிக்கு கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் மதுவாங்கும் அவசரத்தில் மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு கொரோனாவை மறந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர்.
திருத்துறைப்பூண்டி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மளிகை, காய்கறி, டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிைலயில் திருத்துறைப்பூண்டியில் மதியம் 12 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்கும் என்பதை அறிந்த மதுப்பிரியர்கள் மது வாங்கும் அவசரத்தில் நேற்று காலை முதலேயே மதுக்கடைகள் முன்பு திரண்டனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் உள்ள 2 மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அந்த கடைகளில் மதுவாங்க திரண்டிருந்த மதுபிரியர்கள் கொரோனாவை மறந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்கினர். பலர் முககவசம் கூட அணியவில்லை. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்ெகாண்டு மது வாங்கினர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் உள்ள ஆட்டு சந்தையிலும் வியாபாரிகள் ஏராளமானோர் திரண்டனனர். இந்த சந்தையிலும் பலர் முககவசம் அணியாமல் உலா வந்தனர்.

மதுக்கடைகள், சந்தைகள் போன்ற இடங்களில் மக்கள் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கட்டாயப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News