செய்திகள்
வைகோ

தி.மு.க. அரசே ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும் - வைகோ வேண்டுகோள்

Published On 2021-05-02 20:40 GMT   |   Update On 2021-05-02 20:40 GMT
கொரோனா இரண்டாம் அலை பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசிற்கு முன் உள்ள பெரிய சவால் என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா இரண்டாம் அலை பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கின்ற தி.மு.க. அரசிற்கு முன் உள்ள பெரிய சவால் ஆகும்.

அதற்காக சில கருத்துகளை, தமிழக அரசுக்கு வேண்டுகோளாக முன் வைக்க விரும்புகிறேன்.



* அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற எண்ணிக்கையிலான மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு உடனே பணியில் அமர்த்த வேண்டும்.

* இந்தியா முழுமையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ‘ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில், மராட்டியம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் வங்காள தேசத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து வருகின்றது. அதைப் போல, தமிழக அரசும், ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும்.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் எந்த வகையான முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் உரிய, பாதுகாப்பான முக கவசங்களைத்தான் அணிந்து உள்ளார்களா? என்பதை, காவல்துறையின் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News