செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

Published On 2021-04-24 07:15 GMT   |   Update On 2021-04-24 07:15 GMT
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,816-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த 21-ந்தேதி பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்து நேற்று பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுன் ரூ.35 ஆயிரத்து 960-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.35 ஆயிரத்து 816-க்கு விற்றது. கிராமுக்கு ரூ. 18 குறைந்து ரூ.4 ஆயிரத்து 477 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 300 குறைந்து ரூ. 74 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 74 ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News