செய்திகள்
வழக்கு பதிவு

ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்- விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் 120 பேர் மீது வழக்கு

Published On 2021-03-31 06:53 GMT   |   Update On 2021-03-31 06:53 GMT
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 120 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவை கண்டித்து விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில் தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளர் பசுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பசுபதி உள்பட 120 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News