செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2021-03-26 10:48 GMT   |   Update On 2021-03-26 10:48 GMT
கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20,600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
சாம்பவர்வடகரை:

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுபடியும், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படியும் கொரோனா தொற்று நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படுகிறது.

ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆய்க்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பலவேசம், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு), தர்மர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்க்குடி காவல் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்டவற்றில் வருபவர்களிடம் கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20,600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது எனவும், கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்திடவும் செயல் அலுவலர் மாணிக்கராஜ் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News