செய்திகள்
ராஜேந்திரன்

ஏலகிரிமலையில் பள்ளி மாணவியை கடத்திய 2 குழந்தைகளின் தந்தை கைது

Published On 2021-01-25 13:37 GMT   |   Update On 2021-01-25 13:37 GMT
ஏலகிரிமலையில் பள்ளி மாணவியை கடத்திய 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடந்த 18-ந் தேதி ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக மாணவியின் தந்தை ஏலகிரி மலை போலீஸ் நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ்நிலையத்தில் ராஜ்குமார் மற்றும் மாணவி ஆகிய இருவரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சென்று இருவரையும் ஏலகிரிமலை போலீஸே் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருவரும் சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டு திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றியது தெரியவந்தது. மாணவியை பெற்றோருடன் அனுப்பிய போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Tags:    

Similar News