செய்திகள்
ராகுல்காந்தி

வாங்க ஒரு கை பார்க்கலாம்- தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல்காந்தி

Published On 2021-01-23 08:22 GMT   |   Update On 2021-01-23 08:22 GMT
தமிழகம் வருகை தொடர்பாக வாங்க ஒரு கை பார்க்கலாம் என டிவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
கோவை:

ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோவை வந்தார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
 
தமிழகம் வருகை தொடர்பாக வாங்க ஒரு கை பார்க்கலாம் என டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் கொங்கு மண்டலத்தில் எனது தமிழக சகோதர, சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் தனித்துவமான கலாசாரத்துக்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை ஒன்று சேர்ந்து தடுத்து பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய பிரசாரம் தொடர்பான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பிரசார தலைப்புடன் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நம்ம ராகுலுடன் ஒன்னா கைகோர்ப்போம், வாங்க ஒரு கை பார்ப்போம் என்ற வாசகங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News