செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

Published On 2021-01-18 03:05 GMT   |   Update On 2021-01-18 03:05 GMT
கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த பயம் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ இந்தியாவில் தயாரான ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ என 2 கொரோனா தடுப்பூசிகளும் நம்பகத்தன்மை வாய்ந்தது. தடுப்பூசி குறித்த தவறான பிரசாரங்களையும், அச்சத்தையும் கைவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பிரேசில், வங்கதேசம், ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்க இருக்கிறது. தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News